கொங்கு வேளாள குலத்தினரான அந்துவன் குலம் மற்றும் செம்பன் குலம் காணியாளக்காரர்களால் வழிபடப்படும் திருக்கோயில்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. அருகிலுள்ள வெவ்வேறு கிராமங்கள் மாறி மாறி இந்த பூஜையை நடத்தி, அனைவருக்கும் — குலத்தினருக்கு மட்டுமல்ல — அன்னதானம் வழங்குகின்றனர்.
அமாவாசை, பௌர்ணமி சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழாக்கள்

அந்துவன் குலம் மற்றும் செம்பன் குலம் ஆகிய இரு குலங்களின் காணியாளர்கள் ஒன்றிணைந்து, கடந்த செப்டம்பர், 2011-ம் ஆண்டு அமாவாசை அன்று நடத்திய சிறப்புப் பூஜை மற்றும் அன்னதான விழாவின் தொகுப்பு இது. நம் முன்னோர்களின் ஆசியுடனும், குலதெய்வ அருளுடனும் விமரிசையாகக் கொண்டாடப்பட்ட அந்தத் திருவிழாவின் காட்சிகள் இன்றும் நம் கண்களுக்குள்ளே நிழலாடுகின்றன. 14 வருடங்களுக்கு முன்பு நாம் கொண்டாடிய அந்த ஒற்றுமையும், மகிழ்ச்சியும் என்றும் நிலைத்திருக்க இந்த வீடியோவை மீண்டும் பகிர்ந்து கொள்கிறோம். 🗓 ஆண்டு: செப்டம்பர், 2011 🙏 நிகழ்வு: அமாவாசை சிறப்புப் பூஜை & அன்னதானம் 🙌 பங்கேற்பாளர்கள்: அந்துவன் குலம் மற்றும் செம்பன் குலம் காணியாளர்கள் மறக்க முடியாத இந்த நினைவுகளை உங்கள் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்!
Read more →
அன்புடையீர், நிகழும் விசுவாவசு வருடம் மாசி மாதம் 21ந் தேதி ( 5.3.2026 ) வியாழக்கிழமை இரவு 7.00 மணி அளவில் வால்ராசபாளையத்திலிருந்து முனியப்பன் கோவில் திடலுக்கு பூசமணி அழைத்தல் நடைபெறும். மாசி மாதம் 22ந் தேதி ( 6.3..2026 ) வெள்ளிக்கிழமை காலை முதல் திருவிழா, பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், அன்னதானம் நடைபெறும். இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும். இரவு 10.30 மணிக்கு பெரும்பூஜை நடைபெறும். அது சமயம் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு முனியப்பன் அருள் பெற்று செல்லுமாறு வேண்டுகிறோம். தவறாமல் வரி செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் இப்படிக்கு, திருவிழா குழுவினர், அந்துவங்குலம், செம்மங்குலம் கொங்கு வேளாள குல காணியாளக்காரர்கள்
Read more →அந்துவன் குலம் மற்றும் செம்பன் குலம் காணியாளக்காரர்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்து, அமாவாசை, பௌர்ணமி பூஜை நிகழ்வுகள் மற்றும் அறிவிப்புகளை பெறலாம்.
Join the divine — நம் கோயில் நிகழ்வுகளில் பங்கேற்கவும்.
Modamangalam to Thannerpanthalpalayam Road, Thiruchengodu, Tamil Nadu 637304
Every day — 12:00 PM
For bookings and enquiries, please visit the temple office.
Join 500+ devotees already in our community.
Create Devotee AccountAlready have an account? Sign in